வெள்ளி, 5 டிசம்பர், 2008

இந்திரா சௌந்தரராஜனின் - தினம் ஒரு உயிர்

சென்ற வாரம் நான் சென்னையிலிருந்து மும்பை செல்வதற்காக எக்மோர் வந்திருந்தேன், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிகள் எக்மொரீலிருந்து புறப்படுகின்றன. நான் டைம் பாஸ்காக சில புத்தகங்கள் வாங்கினேன், அதில் ஒன்றுதான் " இந்திர சௌந்தர்ராஜனின் - தினம் ஒரு உயிர் ".

சாதாரணமாக டைம் பாஸ்-கு படிக்க ஆரம்பித்தவன் அந்த புத்தகம் முடியும் வரை கீழே வைக்கவில்லை, அத்தனை விறுவிறுப்பு. சினிமா ஷூட்டிங் லொகஷன் பார்ப்பதற்காக செல்லும் ஒரு சினிமா இயக்குநரின் அமானுஷ்ய அனுபவங்கள்தான் கதை..

மொத்தம் 4 பாகங்கள், நான் இரண்டு மட்டுமே வாங்கினேன், மத்த 2 பாகங்களையும் இனிமேல்தான் வாங்கவேண்டும்.உங்களுக்கும் கிடைத்தால் வாங்கி சுவையுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக