சனி, 13 டிசம்பர், 2008

வியர்வை : அறிவியல் விளக்கம்

நமது உடல் முழுவதும் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன, இவை யாவும் நமது தோலின் அடி பாகத்தில் திசுக்களின் உள்ளே இருக்கின்றன. நமது உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் ஒரு சதுரசெண்டிமீட்டருக்கு 400 - 500 சுரப்பிகள் உள்ளதால் அங்கு வியர்வை சிறிது அதிகமாக உண்டாகிறது.

நமது உடல் ஒரு உலை போல, 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டே இருப்பதால் உடலில் ஏராளமானவெப்பமும் கூடவே கழிவு பொருட்களும் உண்டாகின்றன, இந்த கழிவு பொருட்களை வெளியேற்றவும்உடலை குளிர்ச்சியாக வைத்ததுக்கொள்ளவும் வியர்வை சுரப்பிகள் இடைவிடாது இயங்கி வியர்வையை வெளியேற்றுகின்றன.

வியர்வையில் 90% தண்ணீர், 5% உப்பு, 2.5% யூரிக் ஆஸிட், 2.5% ஹிப்யூரிக் ஆஸிட் ஆகியவை உள்ளன. மற்றும் உடலானது மிகவும் அதிகமாக வியர்த்தால் அது நல்லதல்ல, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக